பசியால் உயிரிழந்த பிஞ்சுகள்! டெல்லி மரணத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் பசிக்கொடுமையால் மூன்று குழந்தைகள் மரணமடைந்த சம்பவத்தில், அவர்களுக்கு பசி எடுக்காமல் இருக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் உள்ள மந்தாவாலி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இரண்டு வயது முதல் 8 வயதிலான மூன்று பெண் குழந்தைகள் பட்டினியால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

மருத்துவ ஆய்வறிக்கையில், மரணமடைந்த குழந்தைகள் முறையான உணவுகள் இல்லாத காரணத்தால் பட்டினியால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குழந்தைகளின் வயிற்றுப் பகுதி மீண்டும் உடற்கூறாய்வு சோதனை செய்து பார்க்கப்பட்டதில், விநோதமான மருந்து போன்ற பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதன் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பட்டுள்ளது. குழந்தைகளின் வீட்டில் வறுமையின் காரணத்தால், கை வைத்திய முறையில் அவர்களுக்கு பசி எடுக்காமல் இருக்க மூலிகை கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எனினும், மாதிரிகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே அதன் தன்மை தெரிய வரும் என்று டெல்லி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers