கருணாநிதி உடல்நிலையின் நிலவரம் என்ன? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

Report Print Raju Raju in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்ததாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி அளித்துள்ள பேட்டியில், கருணாநிதிக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்ட செய்தியை அறிந்து துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்ததாகவும், முதுபெரும் தலைவரான கருணாநிதி நலமுடன் இருப்பதாக அமைச்சர்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், கருணாநிதி குடும்பத்தினர் கேட்டுக்கொண்டால் மருத்துவ உதவி அளிப்போம் என கூறியுள்ளார்.

5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு மருத்துவ உதவிகள் செய்ய தயாராக உள்ளோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்