அவனுடன் சேர விடமாட்டேன்: துடிதுடித்து உயிரிழந்த இளம் ஜோடியின் அதிர்ச்சி பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், காதலர்கள் ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் அனந்தபூரை சேர்ந்தவர் உமா தேவி (21). இவரும் மது (25) என்ற இளைஞரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

ஆனால் உமாவின் தந்தை இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உன்னை மதுவுடன் சேரவிடமாட்டேன் என மகளிடம் கூறியுள்ளார்.

இதோடு உமாவுக்கு வேறு நபருடன் திருமணம் செய்துவைக்க முயன்றுள்ளார்.

இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய உமா நேராக சென்று மதுவை சந்தித்த நிலையில் இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.

பின்னர் நேற்று காலை ரயில் தண்டவாளத்தில் உமாவும், மதுவும் உடல் துண்டாகி இறந்துகிடந்தார்கள்.

இருவரின் உடலும் பெரிளவில் சிதைந்துள்ளதால் இது கொலையா அல்லது தற்கொலையா என பொலிசாரால் இன்னும் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

தற்போது இதை தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்