கலைஞர் கருணாநிதியின் ஒருநாள் எப்படி இருக்கும்?

Report Print Fathima Fathima in இந்தியா

திருக்குவளையில் பிறந்து தமிழகத்தின் முதல்வராக உயர்ந்தவர் கருணாநிதி.

உலகிலேயே போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடையாத ஒரே நபர் கருணாநிதி மட்டுமே.

இவரது ஒருநாள் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

அதிகாலை 5 மணிக்கே எழும் பழக்கம் கொண்டவர் கருணாநிதி.

  • எழுந்தவுடனே தமிழகத்தில் கிடைக்கக்கூடிய அத்தனை பத்திரிக்கைகளையும் ஒன்று விடாமல் வாசிப்பது, அடுத்தது உடன்பிறப்புக்கு கடிதம். கடிதம் எழுதி முடித்ததும் தனது தனிச்செயலர் ஷண்முக சுந்தரத்திடம் கூறி அறிக்கைகள் தயார் செய்ய குறிப்புகள் கொடுப்பது.
  • அடுத்ததாக உதவியாளர்களிடம் தகவல்களை பெற்றுக்கொண்டு தன் கைப்பட வாழ்த்து செய்தி எழுதுவது.
  • காலையில் வருகை தரும் சிறப்பு விருந்தினர்களையும், உடன்பிறப்புகளையும் வரவேற்று சந்திப்பது.
  • அறிவாலயம் சென்ற பின்னர் அரசியல் பணிகள் குறித்து கழகச் செயலாளர் மற்றும் கட்சியின் உயர்மட்டக் குழுவினருடன் ஆலோசனை செய்வது.
  • மதிய உணவுக்கு வீடு திரும்பும் கருணாநிதி, ஓய்வுக்கு பின்னர் மாலை நாளிதழ்களை வாசிப்பது.
  • அடுத்ததாக கலைச்சேவை பணிகளை தொடர்வது, தள்ளாத வயதிலும் கூட ஸ்ரீராமானுஜர் எனும் தொடருக்கு திரைக்கதை எழுதிக் கொண்டிருந்தார்.
  • இது முடிந்த பின்னர் மீண்டும் அறிவாலயம் சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பும் கருணாநிதி தொலைக்காட்சி செய்திகளை பார்ப்பார்.
  • இதனை தொடர்ந்து தமக்கான இணையதளப் பக்கத்தில் தொண்டர்களுடன் உரையாடும் கருணாநிதி, இரவு உணவை அருந்துவார்.
  • அடுத்ததாக கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு ஆக்கப்பணிகளுக்கான அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கப்படும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்