அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொழுந்தன்: பின்னர் நடந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொழுந்தனை அவர் தாத்தா அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மதுரை மெயின் ரோட்டில் உள்ள முட்புதரில் அடையாளம் தெரியாத ஒருவர் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டு கிடந்தார்.

இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சூர்யா என தெரியவந்தது.

சம்பம் குறித்து பொலிசார் விசாரித்தத்தில் சூர்யாவின் தாத்தா ஆறுமுகம் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் ஆறுமுகத்தை கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், என் தம்பி மகன் ஆனந்த் திருமணம் செய்த பெண் பற்றி சூர்யா தனது நண்பர்களிடம் தவறாக பேசியுள்ளார்.

அண்ணி முறையான அந்த பெண்ணுக்கு சூர்யா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து நான் என் மகன்களுடன் சேர்ந்து சூர்யாவை கொலை செய்ய முடிவெடுத்து அவரை காரில் அழைத்து சென்று வெட்டி கொன்றோம்.

பின்னர், சூர்யாவின் உடலை காரில் எடுத்துக்கொண்டு வந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே முட்புதரில் வீசி சென்றதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஆறுமுகம் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நான்கு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்கள்.

மேலும் 6 பேரை தனிப்படை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்