கவலைக்கிடமான நிலையில் இருந்த கருணாநிதி: 30 நிமிடத்தில் உடலில் நடந்த மாற்றம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக தலைவர் கலைஞருக்கு இரத்த அழுத்தம் மிகவும் குறைந்துவிட்ட காரணத்தால் நள்ளிரவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர் அவர் நலமுடன் இருப்பதாக நக்கீரன் கோபால் தனியார் தொலைக்காட் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது,

உண்மையில் அவர் அறையில் இருந்து கீழ் கொண்டுவந்த போது கவலைக்கிடமான நிலையில்தான் இருந்தார். ஆனால் மருத்துவமனை வந்த ஒரு 30 நிமிடத்தில் மிக குறைவாக இருந்த இரத்த அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக சீராகி, தற்போது 120/80 என்ற சராசரி நிலைக்கு அவர் வந்துவிட்டார்.

இது அவரது உடல்நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம். இதன் மூலம் அவர் காலம் கடந்து நிற்பார் என்ற பெரும் நம்பிக்கை அனைவருக்கும் வந்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...