அன்று சிறுமி ஹாசினி..இன்று பெற்ற தாயை கொலை செய்த கொடூரன்: பொலிசார் கூறும் விளக்கம் இது தான்

Report Print Santhan in இந்தியா
599Shares
599Shares
ibctamil.com

தமிழகத்தில் தற்போது பரபரப்பை கிளப்பி வருவது சிறுமி ஹாசினியைப் பாலியல் துன்புறுத்தல் செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த தஷ்வந்த் தான், நேற்று இவன் தனது தாய் சரளாவைக் கொன்றுவிட்டு வீட்டிலிருந்த நகை, பணத்துடன் தலைமறைவாகிவிட்டான்.

இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹாசினியின் கொலை வழக்கை விசாரித்துவரும் அம்பத்தூர் சரக டி.ஜி-யான சர்வேஷ் ராஜ் தான், சரளா கொலை வழக்கையும் விசாரித்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், குற்றவாளி யார் என்பதை உறுதி செய்யவும், குற்றம் நடந்த இடத்திலிருந்து தலைமறைவாகி இருக்கும் தஷ்வந்தை தேடி வருவதாகவும், இது குறித்த விவரங்கள் குறைந்தது இரண்டு நாட்களில் தெரியவந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தஷ்வந்த் தரப்புக்காக ஹாசினி வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் விஜயகுமார் வெளிநாடு செல்ல இருப்பதால், வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விவாதங்கள் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தான் தொடங்கும் என கூறப்பட்டதால், ஹாசினியின் தந்தை இந்த வழக்கு வெகு விரைவில் முடிக்காமல் காலதாமதம் ஆனால், நீதி கிடைப்பது கஷ்டம் என்று தெரிவித்திருந்தார்.

இவர் ஒரு புறம் இப்படி கூறிக்கொண்டிருந்த போது, தஷ்வந்தின் தந்தை ஹாசினியின் தந்தைக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், எப்படியும் தன் மகனை விடுதலை செய்துவிடுவேன் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகிக் கொண்டிருந்த சமயத்தில் தான், தஷ்வந்தின் அம்மா சரளாவின் கொலை நிகழ்ந்துள்ளது.

இதனால் தஷ்வந்த் பொலிசாரிடம் சிக்கியதற்குப் பின்னர்தான் இந்தக் கொலை தொடர்பான முக்கியத் தகவல்கள் வெளியே தெரியவரும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்