டிசம்பர் 5 ஆம் திகதி சென்னையை உலுக்கப்போகும் பாதிப்பு: பஞ்சாங்கத்தின் கணிப்பால் பரபரப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா
302Shares
302Shares
ibctamil.com

வேலூர் மாவட்டம் ஆற்காட்டைச் சேர்ந்த ஜோதிடர் கே.என்.நாராயணமூர்த்தி என்பவர், கா.வெ.சீதாராமய்யரின் பஞ்சாங்கத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், “2017-ம் ஆண்டு சூறாவளி மற்றும் கனமழை யால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும். ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஏரி, குளங் கள் நிரம்பி வழியும்” என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், கோடை மழையும் இயல்புக்கு அதிகமாக பெய்தது. ஏராள மான ஏரிகள், குளங்கள் நிரம்பின. சில ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

கார்த்திகை மாதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பாதிக்கும் என்று அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரியை ‘ஒக்கி’ புயல் புரட்டிப் போட்டுள்ளது.

அதேபோல, ‘டிசம்பர் 5-ம் தேதி கனமழை சென்னையை உலுக்கும். மாநகரமே வெள்ளத்தில் மிதக்கும். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவார்கள்’ என்றும் அந்த பஞ்சாங்கம் கணித்துள்ளது.

இதுகுறித்து ஜோதிடர் கே.என்.நாராயணமூர்த்தி கூறியதாவது:

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டிசம்பர் 5-ம் தேதி பெய்யும் கனமழை சென்னையை உலுக்கும். வீடுகளுக்குள் வெள்ளம் புகும். மாநகரமே மிதக்கும் நிலை ஏற்படும். 10-ம் தேதி சூறாவளி காற்று வீசும். 19-ம் தேதி அதிகமான உறை பனியால் பாதிப்பு ஏற்படும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்