தாயை கொலை செய்த தஷ்வந்த் யாரையும் கொலை செய்ய தயங்கமாட்டான்: ஹாசியினியின் தந்தை அச்சம்

Report Print Santhan in இந்தியா
857Shares
857Shares
ibctamil.com

சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தன் தாய் சரளாவை கொன்றுவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அவன் யாரையும் கொலை செய்ய தயங்கமாட்டான் என்று ஹாசினியின் தந்தை கூறியுள்ளார்.

சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த ஹாசினி(6), என்ற சிறுமியை பக்கத்து விட்டு இளைஞரான தஷ்வந்த் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருந்தது தெரியவந்ததது.

அதைத் தொடர்ந்து நேற்று அவரது அம்மாவையும் கொலை செய்து விட்டு அவன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து ஹாசினியின் தந்தை கூறுகையில், சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தஷ்வந்த் போன்றவர்கள் சுதந்திரமாக நடமாடுவது, சமூகத்தில் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும், அவரைப் போன்றவர்கள் யாரையும் கொலைசெய்யத் தயங்க மாட்டார்கள் என்று கூறியிருந்ததை, தஷ்வந்த் தற்போது நிரூபித்துயிருக்கிறான்.

இதனால், எனது குடும்பத்தினர் அச்சத்தில் இருக்கிறார்கள். நாங்கள் இருக்கும் இடம் இப்போது வெளியில் தெரிந்துவிட்டது. எங்கள் அச்சத்தைப் போக்கும் வகையில் இனியும் தாமதிக்காமல் பொலிசார் விரைந்து நடவடிக்கை எடுத்து அவனை கைது செய்ய வேண்டும்.

அவனுக்கு தூக்குதண்டனையை அளிக்க வேண்டும். ஹாசினிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். ஹாசினியைப் போல் மற்ற குழந்தைகளும் பாதிக்கப்படாமல் இருக்க தஷ்வந்த் போன்றவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

இப்போ அம்மாவையே கொலைசெய்துவிட்டு தப்பியவன், இன்னும் எத்தனை பேரை கொலை செய்யப் போகிறானோ, எங்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்