ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடாவிற்கு இதுதான் ரகசிய குறியீடு

Report Print Arbin Arbin in இந்தியா

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒட்டி பணப்பட்டுவாடா ரகசிய வார்த்தை குறியீடுகள் மூலம் நடத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், பணப்பட்டுவாடாவும் திறம்பட நடைபெற்று வருகிறது.

தேர்தல் ஆணையம் எவ்வளவு தான் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும், பணம் கைமாறிக் கொண்டு தான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாக்காளர்களிடையே உலா வரும் ரகசிய வார்த்தை குறியீடு என்ன தெரியுமா? ’சாமி கும்பிட்டாச்சா?’ இது தான் அந்த வார்த்தை. அதன் உண்மையான அர்த்தம் பணம் வாங்கியாச்சா என்பது தான்.

தற்போது வாக்காளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச தொகை ரூ.4000 ஆகும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரில், இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.

பணம் பட்டுவாடா நடைபெறும் போது, அப்பகுதி முழுவதும் ஒரு குழுவினர் உலா வருகின்றனர். அவர்கள் பறக்கும் படையினர் வந்துவிட்டால் உடனடியாக மற்றவர்களுக்கு தகவல் அளித்து, தப்பிக்க வழி செய்துவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் பல தரப்பு மக்களால் முன்வைக்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments