ஜெயலலிதா இன்று வீடு திரும்புகிறார்?

Report Print Basu in இந்தியா

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் திகதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று அவர் போயஸ் கார்டனில் உள்ள வீட்டுக்கு திரும்பவார் எனவும், அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, போயஸ் கார்டன் இல்லத்தில் பிரம்மாண்ட லிஃப்ட் வசதிகள் மற்றும் விரிவாக்க பணிகள் நடந்ததாக தகவல் வெளியாகின.

இதனையடுத்து ஜெயலலிதா தீபாவளிக்கு முன்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி போயஸ் கார்டன் வந்துவிடுவார் என பரவலாக பேசப்பட்டது.

சசிகலா தரப்பும் முதல்வர் ஜெயலலிதாவை வீட்டுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க விருப்பம் காட்டுவதாக செய்திகள் வந்தன. இந்நிலையில், முதல்வர் இன்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், அப்பல்லோவிலிருந்து இன்று வெளியாகும் அறிக்கையில் அவர் இன்று டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பு உள்ளதா என தெரியவரும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments