ஜெயலலிதா அவசியமில்லை: பரபரப்பை கிளப்பிய பண்ரூட்டி ராமச்சந்திரன்

Report Print Santhan in இந்தியா

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திற்கு ஜெயலலிதா அவசியமில்லை என பண்ரூட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த வியாழக்கிழமை இரவு உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவக்குழு சிகிச்சை அளித்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் காய்ச்சல் முழுவதுமாக குணமடைந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் செய்திக் குறிப்பு வெளியிட்டது. இதனால் விரைவில் முதலமைச்சர் வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

அதன் பின்னர் பண்ரூட்டி ராமச்சந்திரன் கூறுகையில், ஜெயலலிதா நலமுடன் இருப்பதாகவும், எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும், தற்போது ஓய்வில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பரிசோதனைகள் செய்ய இருப்பதால், மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருவதாகவும், அதுவும் தற்போது முடிவடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு ஜெயலலிதா தேவையில்லை. மக்களே புரிந்து கொண்டு அதிமுகாவிற்கு வாக்களிப்பார்கள். உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் காலங்கள் இருப்பதால் பொறுத்திருந்து பார்போம் என கூறியுள்ளார்.

மருத்துவமனையில் இருந்தே ஜெயலலிதா கோப்புகளை கவனித்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments