முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை கவலைக்கிடம்?

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக திடீர் வதந்திகள் பரவியதால் அப்பல்லோ மருத்துவர்கள் மீண்டும் விளக்கமளித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த வியாழக்கிழமை இரவு உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அப்பல்லோ மருத்துவக்குழு சிகிச்சை அளித்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் காய்ச்சல் முழுவதுமாக குணமடைந்து விட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் செய்திக் குறிப்பு வெளியிட்டது. இதனால் விரைவில் முதலமைச்சர் வீடு திரும்புவார் என்றும் பேசப்பட்டது.

ஆனால் இதுவரை முதலமைச்சரின் புகைப்படமோ அல்லது அவரது உடல் நிலை குறித்த உரிய விளக்கமோ ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு இதுவரை தரப்படவில்லை.

இதனால் பல்வேறு வதந்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. மட்டுமின்றி தமிழக தலைமை செயலாளரிடம் இருந்து இதுவரை ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து உறுதியான விளக்கங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அது பல்வேறு ஊகங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த ஊகங்கள் சட்டம் ஒழுங்கு நிலவரங்களைக்கூட பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் மருத்துவமனையில் இருந்தபொழுது அவரின் புகைப்படங்களை வெளியிட்டு தமிழக மக்களுக்கு ஆறுதல் அளித்த நிகழ்வு முன்னுதாரணமாக இருக்கையில், அதை ஒட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஊடகங்களுக்கு அளித்து தமிழக மக்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே சென்னையின் சில பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் கடை அடைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments