பத்தாம் வகுப்பு மாணவனுடன் கள்ளத் தொடர்பு: கணவருக்கு நேர்ந்த கொடுமை

Report Print Santhan in இந்தியா

பத்தாம் வகுப்பு மாணவனுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு காரணமாக கணவரை கொலைசெய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தின் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவல்லிகா(25). இவர் தன் கணவர் புள்ளையா(36)வுடன் நல்லபண்டாகுடெம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிரவில்லிகாவுக்கும், அவருடைய உறவினர் பையனுடன்(பத்தாம் வகுப்பு மாணவன்) பழக்கம் ஏற்பட்டுள்ளது.

புள்ளையா இல்லாத சமயங்களில் மாணவன் வீட்டிற்கு வந்து செல்வதால் இருவருக்கு நெருக்கம் அதிகமாகி அவ்வப்போது உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இது புள்ளையாவுக்கு தெரிய வர தன் மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் அவருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. இதன் காரணமாகவே தினந்தோறும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி, கணவரை கொல்ல திட்டமிட்டுள்ளார். இதைத் தான் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மாணவனிடமும் தெரிவித்துள்ளார்.

சம்பவ தினத்தன்று குடித்து விட்டு வந்த கணவரை இருவருமே சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் புள்ளையாவை அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர்.

இறந்தவரின் கால்கள் தரையில் தொங்கிக்கொண்டு இருந்ததாலும், தலை சாய்ந்து இருந்ததாலும் சந்தேகமடைந்த ரோந்து காவலர்கள் இருவரையும் விசாரித்தனர்.

புள்ளையா குடி போதையில் இருக்கிறார், அதனால் அவரை வீட்டிற்கு கொண்டு செல்கிறோம் என்று கூறியுள்ளனர். மேலும் கேள்விகள் கேட்கப்பட இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.

உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments