முன்னாள் உலக அழகிக்கு எச்சரிக்கை நோட்டீஸ்: காரணம் என்ன?

Report Print Arbin Arbin in இந்தியா

முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் கொசுக்களை கட்டுப்படுத்த தவறியதாக கூறி மும்பை மாநகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மும்பை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வருடமும் மழை காலத்தின்போது மாநகராட்சியின் பூச்சிக்கொல்லி குழுவினர் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்துகின்றனர்.

அப்போது கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளை கண்டறிந்து கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

மேலும் கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த தவறும் வீடுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்படுகிறது. இதில் பிரபலங்களும் திரைப்பட நடிகர்களும் கூட தப்புவதில்லை. இந்த வருடமும் வழக்கம் போல சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆண்டு பல்வேறு பகுதிகளில் கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையடுத்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அவ்வகையில், முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவரது வீட்டில் டெங்குவை பரப்பும் கொசு உற்பத்தி இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் அவர் உரிய அபராதத்தை செலுத்தும்படியும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் இம்மாத துவக்கத்தில் நடிகர் சாகித் கபூருக்கும் இதேபோன்று மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments