அடம் பிடிக்கும் கர்நாடகாவுக்கு நாளைக்கு இருக்கு பெரிய ஆப்பு..!

Report Print Jubilee Jubilee in இந்தியா

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் காவிரி நீரை திறந்து விட மாட்டோம் என அடம் பிடித்து வரும் கர்நாடகா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம், 21ம் திகதி முதல் 27ம் திகதி வரை 6,000 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் காவிரி நீரை திறந்து விடாத கர்நாடகா, சட்டசபையை அவசரமாக கூட்டி உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியது. அந்த கூட்டத்தில் காவிரி நீர் கர்நாடகாவின் குடி நீருக்கு மட்டுமே, தமிழகத்திற்கு வழங்க முடியாது என முடிவெடுக்கப்பட்டது.

இதற்கு மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து மத்திய நீர் வளத்துறை, சட்டத்துறை மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கை நீதித்துறைக்கும் அரசியலமைப்புக்கும் இடையே மோதலை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதற்கிடையில் இன்று கர்நாடகா, குடிப்பதற்கே தண்ணீர் இல்லாததால் டிசம்பர் மாதம் தரும் நீரோடு தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுகிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.

ஆனால் தமிழகம் உத்தரவை மதிக்காத கர்நாடக அரசின் மனு மீது விசாரணை நடத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணை நாளை வருகிறது. அப்போது தீர்ப்பை மதிக்காத கர்நாடகா மீது கடும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது. இதனால் கதிகலங்கி போய் உள்ளது கர்நாடகா.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments