ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிய பெண்: பிரபல நடிகரை கண்கலங்க வைத்த சம்பவம்

Report Print Basu in இந்தியா

ரயில் விபத்தில் சிக்கிய பெண்ணை பொலிசார் ஒருவர் காப்பாற்றும் பரபரப்பு வீடியோ ஒன்றை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குறித்த வீடியோவில், ஓடும் ரயிலில் இருந்து இறங்கும் குறித்த பெண் நிலை தடுமாறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக் கொள்கிறார்.

இதைக்கண்ட அருகிலிருந்த பொலிசார் ஒருவர், உடனே ஓடிச்சென்று அந்த பெண்ணை இழுத்து காப்பாற்றுகிறார். இதில் அந்த பெண்ணிற்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.

இந்நிலையில், பெண்ணின் உயிரை காப்பாற்றியவர் லோனாவாலா பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் Pawan Tayde என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அக்ஷய் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments