பேரணியில் ராகுல்காந்திக்கு நேர்ந்த விபரீதம்: பரபரப்பு வீடியோ

Report Print Basu in இந்தியா

உத்தர பிரதேசத்தில் பேரணியின் போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவத்திற்கு ஆர.எஸ்.எஸ் மற்றும் பாரதீய ஐனதா மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு முன்னோட்டமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி விவசாயிகளை நேரில் சந்திக்கும் பேரணி ஒன்றை, மாநிலம் முழுவதும் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் சீதாப்பூரியில் திறந்தவெளி வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் ராகுல்காந்தியை நோக்கி காலணியை வீசினார்.

இதனையடுத்து காலணியை வீசிய இளைஞரை கைது செய்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments