விபச்சார போஸ்டர்.. கும்மாளம்: மல்லிகா பரமசிவத்தின் கல்தா பின்னணி இதுதான்!

Report Print Jubilee Jubilee in இந்தியா

உள்ளாட்சித் தேர்தலில் 12 மாநகராட்சிகளில் மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பதவிகளுக்குப் போட்டியிடும் அதிமுகவினரின் முழுமையான பட்டியலை, முதல்வரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

இந்தப் பட்டியலைப் பார்த்து ஈரோடு அதிமுகவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனராம். இந்த எல்லையில்லா மகிழ்ச்சிக்கு காரணம் மேயர் மல்லிகா பரமசிவத்துக்கு மீண்டும் சீட் தராதது தான் காரணமாம்.

கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரோடு மாநகராட்சிக்கான மேயர் வேட்பாளராக மல்லிகா பரமசிவத்தை அதிமுக மேலிடம் அறிவித்தது. அன்று முதல் பதவி முடியும் வரை ஒரே பஞ்சாயத்து மயமாக தான் இருந்துள்ளது.

2011ல் அவர் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனே ஈரோட்டில் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர் தமிழகத்தையே பரபரப்பாக்கியது.

"1999ம் ஆண்டு விபச்சார வழக்கில் கைதான ஈரோடு மாநகர மேயர் அதிமுக வேட்பாளரா? சிந்திப்பீர் குற்ற எண்: 682/99" என போஸ்டர் ஒட்டப்பட்டது.

இதன் பின்னர் மேயராக வெற்றி பெற்ற மல்லிகா பரமசிவம் ஆட்டத்தை ஆரம்பித்தார்.

துணை மேயர் பதவி ஏற்பு நிகழ்வு பேனரில் தம்முடைய படத்தை போடவில்லை என ரகளையில் ஈடுபட்டார்.

ஈரோடு காலைக் கதிர் நாளிதழ் அலுவலகத்தில் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்திய சர்ச்சையிலும் சிக்கினார்.

அவரது ஆட்டத்தின் உச்சகட்டமாக அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் குத்தாட்டம் போட அதிமுகவும் பிரச்சனையாகிப் போனது.

சட்டசபை தேர்தலின் போது எம்ஜிஆர் காலத்து அதிமுக தொண்டரான மல்லிகாவின் அப்பாவே திமுகவில் போய்சேர்ந்துவிட்டார். அந்தளவுக்கு அராஜகம் செய்திருக்கிறார் மல்லிகா.

அதுமட்டுமல்லாமல் அண்மையில், அதிமுக எம்பி சத்தியபாமாவின் கணவர் வாசு கொடுத்த ஒரு பேட்டிதான் மிக முக்கியமானது என கூறப்படுகிறது.

சசிகலா புஷ்பா, மனைவி சத்தியபாமா, மல்லிகா பரமசிவம் எல்லோருமே திருச்சி சிவாவுடன் அன்னோன்யமாக இருந்தாங்க என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

இதனாலே அவருக்கு கல்தா கொடுத்ததற்கு மேலிடத்திற்கு ஒரு பெரிய கும்பிட்டு போட்டு குஷியில் இருக்கிறார்களாம் அதிமுகவினர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments