தாயின் சடலத்தை எரிக்க பணமில்லாமல் தவித்த மகள்கள்! வீட்டு கூரையை பிரித்து எரித்த கொடூரம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் தங்கள் தாயின் சடலத்தை விறகு வைத்து எரிக்க பணம் இல்லாததால் வீட்டு கூரையை வைத்து அவரின் நான்கு மகள்களும் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் உள்ள கலாகண்டி மாவட்டதை சேர்ந்தவர் கனாக் சத்பதி (75), இவர் கணவர் சில வருடங்களுக்கு முன்னர் இவரை விட்டு சென்று விட்டார்.

இவர் தனது நான்கு மகள்களான பங்காஜினி தாஸ் (50) பிரதீபா (39) ராதா(45) சஞ்சுகா (40) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நான்கு பெண்களில் இருவர் விதவைகள், மற்ற இருவர் கணவனை விட்டு பிரிந்தவர்கள் ஆவர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மூதாட்டியான கனாக் சத்பதி உடல் நலக்குறைவால் திடீரென காலமானார்.

அவரை பாடையில் தூக்கவும், சுடுகாட்டுக்கு கொண்டு சென்று எரிவூட்டவும் அவரின் நான்கு பெண்களும் தங்கள் ஊர் மக்களிடம் உதவி கேட்டுள்ளனர்.

ஆனால் யாருமே அவர்களுக்கு உதவ முன்வரவில்லை என தெரிகிறது. சடலத்தை எரிக்க வாங்க வேண்டிய விறகுக்கு பணம் இல்லாத நிலையில் பொறுத்து பார்த்த அவர்கள் தங்கள் வீட்டு மேற்கூரையை பீய்த்து அதில் இருந்த விறகுகளை வைத்து தாங்களே சடலத்தை சுமந்து கொண்டு சென்று எரித்துள்ளனர்.

இந்த துயர சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments