ரஜினியின் அரசியல் பிரவேசம்: சகோதரர் பரபரப்பு பேட்டி

Report Print Raju Raju in இந்தியா

நடிகர் ரஜினிகாந்த் ஒரு போதும் அரசியலுக்கு வர மாட்டார் என அவர் மூத்த சகோதரர் சத்தியநாரயணா கூறியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஷ்வரத்தில் உள்ள கோவிலுக்கு நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாரயணா தனது குடும்பத்துடன் வந்தார்.

அங்கு அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் முடிந்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக முதல்வர் உடல் நலம் சீக்கிரம் குணமடையவும், காவேரி பிரச்சனை தீர்ந்து, இரு மாநில மக்களுக்குள்ளும் சகோதரத்துவம் நிலவவும் சிறப்பு கலசாபிஷேக பூஜை செய்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனது சகோதரரும் நடிகருமான ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வாய்ப்புகள் கிடையாது என்றும் அது தான் எங்கள் குடும்பத்தாரின் விருப்பமும் கூட என அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments