ஆசியாவின் நீளமான பாலம் இது தான்! எவ்வளவு கோடி தெரியுமா?

Report Print Jubilee Jubilee in இந்தியா

பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் ஒன்று இன்னும் 7 மாதங்களில் திறக்கப்பட உள்ளது.

அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் மாநிலங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இந்த பாலம் ஆசியாவின் மிக நீளமான பாலமாக கருதப்படுகிறது.

இந்த பாலம் ரூ.938 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இது தோலா - சதியா பகுதிகளை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த பாலம் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் மாநிலங்களுக்கு இடையேயான பயண நேரத்தை வெறும் 4 மணி நேரமாக குறைக்கும்.

திபாங் மற்றும் அன்ஜாவ் எல்லைகளுக்கு ராணுவ படைகளை கொண்டு வர சிறந்த வழி இல்லாத நிலையில், இந்த பாலம் மூலம் தேஜ்புர் வழியாக ராணுவ படைகளை எளிதில் சென்று வர முடியும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments