மனைவியின் நடத்தையில் சந்தேகம்: கொடூரமாக கொலை செய்த கணவன்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை கொடூரமாக கொலை செய்த கணவனின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரதாப் குமார், இவர் மனைவி சுகந்தி(35), இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

ஒடிசாவிலிருந்து கட்டிட வேலை செய்து பிழைக்க கணவனும், மனைவியும் சென்னை அருகில் உள்ள திருவெற்றியூரில் தங்கி வேலை செய்து வந்தனர்.

தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட பிரதாப் குமார் அவருடன் இது சம்மந்தமாக அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவிக்குள் சண்டை முற்றிய நிலையில் மனைவி என்றும் பார்க்காமல் பிரதாப் குமார் அவர் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

அடுத்த நாள் காலை வெகு நேரமாகியும் அவர் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அவர் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார்.

உடனே பொலிசிற்கு அவர்கள் தகவல் அளித்ததையடுத்து, விரைந்து வந்த பொலிசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கொலையாளி பிரதாப குமாரை பொலிசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments