அம்மா உடல் நலம் குறித்து பஞ்ச் டயலாக்: சர்ச்சையில் சிக்கிய பிரபலம்

Report Print Basu in இந்தியா

சென்னை வெள்ளத்தின் போது அம்மா வரட்டும்னு காத்துக்கொண்டிருந்தோம் என கருத்து தெரிவித்து பதவியை பறிகொடுத்த அதிமுக பிரமுகர் நாஞ்சில் சம்பத் தற்போது மீண்டும் முதல்வர் குறித்து கருத்து தெரிவித்து சிக்கிக்கொண்டுள்ளார்.

2015ம் ஆண்டு மழை வெள்ளத்தில் சென்னை சிக்கிய போது, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், அம்மா வரட்டும்னு காத்துக்கொண்டிருந்தோம் என அதிரடி கருத்து தெரிவிக்க, அது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதையடுத்து அவர் துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

இந்நிலையில் முதல்வர் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார். மருத்துவர்களின் கண்காணிப்பில் அம்மா இருக்கிறார். அம்மாவின் கண்காணிப்பில் தமிழகம் இருக்கிறது என கூறியுள்ளார்.

ஜெயலலிதாவை குறித்து அவர் கூறியுள்ள இக்கருத்து அதிமுக-வினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments