கணவனை கொன்று சடலத்தை 12 கி.மீ தூக்கி சென்ற மனைவி: அம்பலமான பகீர் பின்னணி

Report Print Peterson Peterson in இந்தியா

தெலுங்கானா மாநிலத்தில் கணவனை கொலை செய்த மனைவி அவரது சடலத்தை மோட்டார் சைக்கிளில் வைத்து 12 கி.மீ தூரம் வரை கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் தலைநகரமான ஹைதராபத்தில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே நகரில் புல்லையா மேண்டம்(30) மற்றும் பிரவல்லிக்கா மேண்டம்(25) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.

பிரவல்லிக்காவின் அண்ணன் மகனான 16 வயது சிறுவன் ஒருவன் இவர்களுடன் தங்கி 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில், தனது அண்ணன் மகனுடன் பிரவல்லிக்காவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த உறவுக்கு தடையாக உள்ள தனது கணவனை தீர்த்துக் கட்ட பிரவல்லிக்கா முடிவு செய்துள்ளார்.

பின்னர் இத்திட்டத்தை அண்ணன் மகனிடம் தெரிவிக்க இருவரும் புல்லையாவை தீர்த்துக்கட்ட சரியான நேரம் பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று இரவு 11 மணியளவில் மது அருந்திவிட்டு வந்த கணவனின் தலையை பிடித்து மனைவி சுவற்றில் பலமாக மோதியுள்ளார்.

பின்னர், கணவனின் சிறுநீரக உறுப்பையும் தனது காலால் பலமாக உதைத்து தாக்கியுள்ளார். இந்த கொடூரமான தாக்குதலில் கணவன் பலியாகியுள்ளார். இந்த தாக்குதலுக்கு 16 வயது சிறுவனும் உதவியுள்ளான்.

இதனை தொடர்ந்து சடலத்தை வெளியே தூக்கி வந்த இருவரும் அதனை மோட்டார் சைக்கிளில் ஏற்றியுள்ளனர்.

அண்ணன் மகன் மோட்டார் சைக்கிளை ஓட்ட பின்னால் பிரவல்லிக்கா அமர்ந்துள்ளார். இருவருக்கும் நடுவில் கணவனின் சடலத்தை உயிர் உள்ளது போன்று அமர வைத்துள்ளனர்.

பின்னர், மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட இருவரும் சுமார் 12 கி.மீ பயணம் செய்துள்ளனர்.

அப்போது, சாலையில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இரவுப்பணியில் இருந்துள்ளனர். தூரத்தில் மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் வருவதை பார்த்து அவர்களை நிறுத்த முயன்றுள்ளனர்.

ஆனால், பொலிஸ் அதிகாரிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த இருவரும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த பொலிசார் அவர்களை சுமார் 2 கி.மீ தூரம் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். இதற்கு பின்னர் தான், இருவருக்கும் நடுவில் சடலம் இருந்தது பொலிசாருக்கு தெரியவந்தது.

இருவரையும் கைது செய்தபோது, ‘குடிபோதையில் தனது கணவன் வெளியில் இறந்து கிடந்ததாகவும், இவரது சடலத்தை தூக்கி செல்ல தனது அண்ணன் மகனின் உதவியை நாடியதாகவும்’ பிரவல்லிக்கா நாடகமாடியுள்ளார்.

ஆனால், காவல் நிலையத்தில் இருவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments