நடுரோட்டில் பெண்ணை நிர்வாணப்படுத்திய கொடூர இளைஞர்கள்! எதற்காக?

Report Print Fathima Fathima in இந்தியா

இந்தியாவின் பஞ்சாப்பில் 8000 ரூபாய் பந்தயத்துக்காக திருமணமான பெண்ணை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்திய இளைஞர்களை பொலிசார் தேடி வருகிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா நகரை சேர்ந்த ஒரு ஆண் தனது மனைவி மற்றும் மகளுடன் வெளியில் சென்று விட்டு இரவு 10.30 மணி அளவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

வீட்டுக்கு வரும் வழியில் இவர்களை வழிமறித்த 25 வயது மதிக்கத்தக்க மூன்று வாலிபர்கள், குறித்த பெண்ணின் உடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தியுள்ளனர்.

பின்னர் தங்களுக்குள் சிரித்து கொண்டே அந்த மூவரும் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.

அந்த பெண் அவமானத்தில் பரிதாபமாக நின்று கொண்டிருந்த நிலையில், அவர் கணவர் அந்த மூன்று இளைஞர்களையும் ஓடிச்சென்று பிடிக்க முயன்றார்.

அதில் ஒருவன் மட்டும் பிடிப்பட மற்ற இருவரும் தப்பியோடி விட்டனர்.

பின்னர் பிடிப்பட்ட இளைஞன் பொலிசிடம் ஒப்படைக்க பட விசாரணையில் அவன் பெயர் ரவிகுமார் என்பதும் 8000 பந்தய பணத்துக்காக இந்த செயலில் ஈடுபட்டதாவும் கூறினான்.

மேலும் அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது, தப்பிச்சென்ற இளைஞர்கள் பொலிசார் தேடி வருகின்றனர்.

தப்பித்து ஓடிய மீதி இருவரையும் பொலிசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments