அடடே..அதே நாள்..அதே தேர்தல்! ஜெயலலிதாவின் கணிப்பு பலிக்குமா?

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ளன. இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் 2011ம் ஆண்டும் அக்டோபர் 17, 19ம் திகதிகளில் தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது, வாக்கு எண்ணிக்கை 21ம் திகதி நடத்தப்பட்டது.

இந்த ஆண்டும் இதே திகதிகளில் தான் வாக்குபதிவும், வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளன.

இது தற்செயலானதா அல்லது சென்டிமென்ட்டாக இந்தத் தேதியை தேர்வு செய்துள்ளனரா என்பது தெரியவில்லை.

கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 20,606 பதவிகளில் 10,083 ஐ கைப்பற்றி அதிமுக விஸ்வரூப வெற்றியைப் பெற்றது.

இதற்கு அடுத்தபடியாக திமுக 4108 இடங்களையும், சுயேட்சைகள் 3537 இடங்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments