ஜெயலலிதா உடல் நிலை பற்றிய வதந்திகள்: முற்றுப்புள்ளி வைத்த நிர்வாகம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் ஐந்து நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரண மாக சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிவிக்கபட்டது.

நேற்று முன்தினம்,'காய்ச்சல் இல்லை, வழக்கமான உணவுகளை சாப்பிடுகிறார். தொடர் கண்காணிப்பில் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

ஆனால் மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு செல்ல உள்ளார் என தகவல்கள் பரவின.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் அளித்த பேட்டியில், முதல்வரின் உடல்நிலை நன்றாக உள்ளது, காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது.

தேவையான அனைத்து உடல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. தற்போது வழக்கமான உணவை உட்கொள்கிறார்.முதல்வரின் உடல் நிலை குறித்து, பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன, அவை உண்மைக்கு புறம்பானவை.

தற்போதைய நிலையில் முதல்வர் வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெறும் தேவை ஏற்படவில்லை; சிகிச்சைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்.

அவர் மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஓரிரு நாளில் வீடு திரும்பி அவருடைய பணிகளை மேற்கொள்வார் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments