வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்களிடம் நூதன கொள்ளை

Report Print Arbin Arbin in இந்தியா

தெலங்கானா மாநிலத்தில் பலாத்காரம் செய்துவிடுவதாக மிரட்டி பெண்களிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தஎலங்கானாவின் புறநகர் பகுதிகளில் வசித்துவரும் பெண்களை மட்டுமே குறி வைத்து இந்த நூதன கொள்ளை நடைபெற்று வந்துள்ளது. குறிப்பிட்ட பெண்களுக்கு மென்பொருள் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி அவர்களிடன் நெருங்கி பழகியுள்ளார் ரெவல்லி ஸ்வராஜ் எனப்படும் இந்த நபர்.

ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட பெண்களை பலாத்காரம் செய்து விடுவதாக மிரட்டி அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இவரை சுற்றி வலைத்த பொலிசார், அவரிடம் இருந்து 180 கிராம் அள்வுக்கு தங்க நகைகளும், கைப்பேசிகள் உள்ளிட்ட பொருட்களை மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

தெலங்கானாவின் கரீம்நகர் பகுதியில் குடியிருக்கும் இவர் மென்பொருள் தொடர்பான தொழில் செய்து வருவதாக பொலிசாரிடம் கூறியுள்ளார். இதன்பொருட்டே பல பெண்களை இவர் ஏமாற்றி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments