முன்னாள் காதலனை கரம் பிடிக்க பொலிசில் காதலி நடத்திய பலே நாடகம்

Report Print Santhan in இந்தியா

நாமக்கல் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மீது பொலிசார் பாலியல் பலாத்கார வழக்கு போடுவோம் என மிரட்டியதால், அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்லின் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். ஆட்டோ டிரைவரான இவர், மோட்டூர் கிராமத்தை சேர்ந்த பிரியா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

பிரியாவும் முருகனை காதலித்துள்ளார். இதன் காரணமாக இவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இவர்களின் காதலை பிரியாவின் பெற்றோர் ஏற்க மறுத்துள்ளனர்.

இதனால் பிரியாவின் பெற்றோர் அவருக்கு மற்றொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் பிரியாவோ, முருகனை மறக்க முடியாமல், அவர் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.

முருகனோ வேறறோருவருடன் திருமணம் ஆனதால், அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் பிரியா அருகில் உள்ள காவல் நிலையத்தில் முருகன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் அளித்துள்ளார்.

பொலிசார் முருகனை அழைத்து பிரியாவை திருமணம் செய்து கொள்ளும்படியும், அவ்வாறு திருமணம் செய்ய மறுத்தால் உன் மீது பாலியல் பலாத்காரம் வழக்கு தொடர்ந்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

பொலிசாரின் மிரட்டலுக்கு பயந்த முருகன் பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி பொலிசாரிடம் எழுதி கொடுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த முருகன் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பொலிசாரின் மிரட்டல் காரணமாகவும், பிரியாவின் தொடர் டார்ச்சர்களிலாலும் தான் முருகன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments