தீ வைத்து கொளுத்தப்பட்ட தமிழக இளைஞர்: மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த கண்ணன் மலேசியாவில் துங்குகில்லான் என்னுமிடத்தில் தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில் கண்ணன் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக் கொளுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் தீக்காயம் அடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் அங்குள்ள இவரது நண்பர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் அவர் விமானத்தில் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

திருச்சி விமான நிலையம் வந்திறங்கிய அவரை உறவினர்கள் அங்கிருந்து தொடர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தீக் காயயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள தன் மகனுக்குத் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று கண்ணனின் தந்தை ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments