மகளுக்கு எச்சரிக்கை விடுத்த தந்தை: காரணம் என்ன?

Report Print Santhan in இந்தியா

தன் மகள் யாரையாவது காதலித்து ஓடிப்போனால், அடுத்த 24 மணி நேரத்தில் தான் இறந்து விடுவதாக வெள்ளாள கவுண்டர் சங்கத்தின் நிறுவனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பா.ம.கா சார்பில் பெண்களின் பாதுகாப்பும், ஐ.நா. ஒப்பந்தங்களும், தமிழ்நாட்டில் செய்ய வேண்டியது என்ன? என்ற சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் வெள்ளாள கவுண்டர் சங்கத்தின் நிறுவனர் ரவிக்குமார் கூறியதாவது, தான் ஒன்றும் காதலுக்கு எதிரானவன் அல்ல, காதலிப்பது அவர்களுடைய விருப்பம். இதை நான் ஒரு போதும் குறை கூறமாட்டேன்.

அக்காதலை வீட்டில் உள்ள பெற்றோர்களிடம் கூறி திருமணம் செய்து கொள்ளுங்கள். பெற்றோர்கள் சரியான பொருத்தம் என்றால் திருமணம் செய்து வைப்பார்கள் என்று கூறினார்.

மேலும் தன் மகள் காதலித்து இன்னொருவனோடு ஓடி விட்டால், அடுத்த 24 மணி நேரத்தில் நான் இறந்து விடுவேன். அது மட்டுமில்லாமல் என் மகளை எப்படி வளர்க்கவேண்டும் என்பது எனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments