கைதாகிறாரா கார்த்தி சிதம்பரம்?

Report Print Jubilee Jubilee in இந்தியா

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ய முயற்சி மேற்கொண்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

2ஜி அலைக்கற்றை முறைகேடுடன் தொடர்புடைய ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில், மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை சார்பில் பண மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய ஒரு நிறுவனத்தின் இரு இயக்குநர்களுக்கு அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் சம்மன்களை அனுப்பியது.

மேலும், இவ்வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் கார்த்தி சிதம்பரத்திற்கு இதுவரை 3 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் கார்த்திக் சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்து வருவதுடன், சம்மனுக்கு எதிராகவும் கேள்வி கேட்டுள்ளார். சம்மன் ஒன்றிற்கு எதிர் கேள்வி எழுப்பியுள்ள கார்த்தி சிதம்பரம், நான் என்ன குற்றம் செய்தேன்? என கேட்டுள்ளார்.

இந்நிலையில் விசாரணைக்கு ஒத்துழைக்காத கார்த்தி சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்கலாமா என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments