உச்சநீதிமன்றத்தில் பட்டைய கிளப்பிய அஜித்தின் வசனம்!

Report Print Abhimanyu in இந்தியா

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை காவிரியில் இருந்து திறந்து விடாத கர்நாடக அரசை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதன்போது நீதிபதிகள் கூறியதாவது, காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழகமும், கர்நாடகமும் நல்லுறவை பராமரிக்க வேண்டும்.

கர்நாடக அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை மனிதாபிமான அடிப்படையில் வழங்க வேண்டும்.

ஒருவேளை நீர் பற்றாக்குறை இருந்தால் 50 டிஎம்சி இல்லை என்றாலும், வாழ்வாதாரத்திற்கு தேவையான நீரையாவது காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும்.

இல்லையெனில் எவ்வளவு நீரை தமிழத்திற்கு திறந்து விட முடியும் என செப்டம்பர் 5ம் திகதி அன்று பதிலலிக்க வேண்டும். “வாழு வாழ விடு” என கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

இங்கு தல அஜித்தின் வசனமான “வாழு வாழ விடு” என கூறிய வார்த்தை தற்போது வைரலாக பரவி வருகின்றது.

மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான நீரை திறந்து விடாததால், 40 லட்சத்திற்கும் மேலான தமிழக விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments