சட்டசபை முன் தீக்குளிக்க முயற்சித்த காஞ்சனா! சாதனை பெண்ணுக்கு நேர்ந்த கதி?

Report Print Basu in இந்தியா

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது தலைமைச் செயலகத்தில் திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் காஞ்சனா தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதை பார்த்த சக பொலிசார் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

திருவொற்றியூர் மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் காஞ்சனா. இவர் 1999ம் ஆண்டு பேட்ஜ். தடகள வீராங்கனையாக இருந்ததோடு, 350 பதக்கங்களை பெற்றிருக்கிறார்.

காஞ்சனாவின் அப்பா சென்னை ஐசிஎஃப் ஊழியர், குத்துச்சண்டை வீரர். அவர் கொடுத்த ஊக்கத்தால்தான் விளையாட்டு வீராங்கனையானார் காஞ்சனா.

13 வயதில் விளையாட தொடங்கிய அவர், 200 மீட்டர், 400 மீட்டர், 1500 மீட்டர் தடகள ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு ஓடி பல பதக்கங்களை வென்றுள்ளார்.

மாநில அளவிலான காவல்துறை தடகள போட்டிகளிலும் புதிய சாதனை செய்திருக்கிறார். ஆசிய அளவிலான மாஸ்டர்ஸ் அத்லெடிக் சாம்பியன் மீட்களிலும் காஞ்சனா பங்கேற்றுள்ளார்.

பாங்காக்கில் நடந்த பந்தயங்களில் 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வாங்கினார். 2008 மலேசியாவில் நடந்த போட்டிகளில் 5 பதக்கங்கள், தைவானில் 4 பதக்கங்கள், மறுமுறை மலேசியா சென்று நான்கு பதக்கங்கள் என மொத்தமாக 350 பதக்கங்கள், சான்றிதழ்களுக்கு மேல் வென்று குவித்துள்ளார்.

அத்தனையையும் மீறி நாம் சாதித்தே தீர வேண்டும் என்று முழங்கிய காஞ்சனா மனமுடைந்து தீக்குளிக்க முயற்சித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது தீக்குளிப்பு முயற்சிக்கான காரணங்கள் குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments