புத்தர், ஏசு, காந்தி மூன்றும் கலந்த கலவை யார் தெரியுமா?

Report Print Basu in இந்தியா

முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் புத்தர், ஏசு, காந்தி மூன்றும் பேரும் கலந்த கலவை என தமிழக முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிட்டார்.

தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொரில் வருவாய்த்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான தோப்பு வெங்கடாச்சலம், இங்கிலாந்தை செம்மைப்படுத்திய தாட்சர் போல, சிங்கப்பூரை உருவாக்கிய லி குவான் யூ போல, மலேசியாவை மேம்படுத்திய மகாதிர் போல, தமிழகத்தை வளப்படுத்தியவர் புரட்சித் தலைவி அம்மா என தொடங்கினார்.

பின்னர் திடீரென புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக ,தோழா ஏழை நமக்காக என்று பாடி, பின்னர் விளக்கமும் அளித்தார்.

புத்தனின் ஞானமும், ஏசுவின் கருணையும், காந்தியின் துாய உள்ளம் என்ற மூன்றையும் ஒருங்கே கொண்டவர் எங்கள் அம்மா என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments