என்னை கொன்று விட்டார்கள்! திண்டுக்கல் லியோனி பொலிசில் பரபரப்பு புகார்

Report Print Jubilee Jubilee in இந்தியா

தன்னை பற்றி வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பட்டிமன்ற நடுவரும், திமுக தலைமைக்கழக பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

யாரோ வாட்ஸ் அப்பில் திண்டுக்கல் ஐ. லியோனி கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக வதந்தி கிளப்பி விட்டுள்ளனர்.

சில நாட்களாக இதைப் பற்றி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், லியோனி வதந்தியை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய லியோனி, கடந்த மாதம் 27ம் திகதியில் இருந்து என்னை பற்றி வாட்ஸ் அப் மூலம் தவறான வதந்தியை பரப்புகிறார்கள்.

அவினாசி தொகுதியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் நான் பேசிவிட்டு வந்த பிறகுதான் என்னைப்பற்றி இதுபோல் வதந்தி பரப்புகிறார்கள். நான் விபத்தில் இறந்து விட்டதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் வெளியிடுகிறார்கள்.

இது தொடர்பாக எனது நண்பர்கள், குடும்பத்தினர் ஏராளமான பேர் விசாரிக்கிறார்கள். இதனால் நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். இவ்வாறு வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments