இளம் பெண்ணை கொன்று பிணத்துடன் உறவுக்கொண்ட காமக் கொடூரர்கள்

Report Print Basu in இந்தியா

பெங்களூரில் இரண்டு இளைஞர்கள், பெண்ணை கொன்று பிணத்துடன் உறவுக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ராஜீவ், ஷ்யாம் ஆகியோர் மீது கொலை மற்றும் கற்பழிப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பொலிசார் அளித்துள்ள தகவலில், கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி கொலை நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட 26 வயதான பெண்ணின் கணவர் பெங்களூரில் பானி பூரி கடை நடத்தி வருகிறார்.

கடையில் வேலை பார்த்து வந்த உத்திர பிரதேசத்தை சேர்ந்த ராஜீவ் கடந்த ஆண்டு வேலையை விட்டு நின்றுள்ளார்.

அவருக்கு சம்பள பாக்கியாக 7,500 ரூபாய் பணம் கொடுக்க வேண்டியிருந்துள்ளது. இந்த பணத்தை கேட்க தனது நண்பன் ஷ்யாம் என்பவனோடு முதலாளி வீட்டிற்கு ராஜிவ் சென்றுள்ளார்.

ஆனால் அவர்கள் சென்றபோது பிரதாப் வீட்டில் இல்லை. அவருடைய மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது இரண்டு குழந்தைகளும் வீட்டின் மற்றொரு அறையில் இருந்துள்ளனர்.

வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட இருவரும், வீட்டை கொள்ளையடித்தது மட்டுமல்லாது அந்த இளம்பெண்ணை கொலை செய்துள்ளனர். மேலும், சடலமாக கிடந்த அந்த பெண்ணின் உடலோடு இருவரும் உறவு கொண்டுள்ளனர்.

அதன் பின்னர் தலைமறைவான இருவரையும் கடந்த ஒரு மாதமாக பொலிசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ராஜிவ் மற்றும் ஷ்யாம் ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments