மாணவிகள் முன் நிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபல நடிகர்

Report Print Santhan in இந்தியா

கேரளாவில் பள்ளிமாணவிகள் முன் நிர்வாணமாக போஸ் கொடுத்ததாக பிரபல மலையாள நடிகர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா மாநிலம் ஒற்றப்பாலம் அருகே பத்திரிப்பாலா பகுதியில் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு கடந்த 27 ஆம் திகதி பள்ளி மாணவிகள் சிலர் பேருந்துக்காக காத்திருந்த போது, மாணவிகள் அருகே கார் ஒன்று வந்து நின்றுள்ளது.

அப்போது காரின் உள்ளே இருந்த நபர் ஒருவர் மாணவிகள் முன் நிர்வாணமாக போஸ் கொடுத்தது மட்டுமில்லாமல், செல்பி புகைப்படம் எடுத்துள்ளார்.

இதனால் மாணவிகள் காரின் எண்ணை குறித்து பொலிசில் புகார் அளித்தனர். பொலிசார் விசாரணையில் அது மலையாள வில்லன் நடிகர் ஸ்ரீஜித் ரவியின் கார் என தெரியவந்தது.

இதனால் பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் ஸ்ரீஜித் ரவியோ அது தான் இல்லை எனவும், நானாக இருந்தால் மாணவிகள் தன்னை எளிதில் அடையாளம் கண்டிருப்பார்கள் என தெரிவித்தார். மேலும் வண்டி எண் தன்னுடையது தான், ஆனால் மாணவிகள் தவறாக வண்டி எண்ணை குறித்திருக்கலாம் எனவும், இந்த சம்பவத்திற்கும், தனக்கும் சம்பந்தமில்லை என கூறினார்.

விரைவில் இது தொடர்பான உண்மை வெளியில் வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments