கருணாஸ் அதிமுகவுக்கு பலமா? செல்லமா?

Report Print Maru Maru in இந்தியா

நடிகரும், திருவாடணை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான கருணாஸ், சமீபத்தில் சட்டசபையில் சினிமா பாடல்களை பாடி கலகலப்பூட்டினார். அதை முதல்வர் ஜெயலலிதா உட்பட அதிமுகவினர் ரசித்துக் கேட்டனர்.

அதற்கு காரணம் அவர் பாடிய பாடல் அப்படி, ’தெய்வமே தெய்வமே.... கண்டுகொண்டேன் அன்னையை’ என்ற சிவாஜி நடித்த பாடலும், ’நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற, இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற, ....நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே’ இது எம்.ஜி.ஆர். தனிகட்சி ஆரம்பித்த சமயத்தில் வெளியாகி, தமிழக பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து, எம்ஜி.ஆருக்கு பெரிய புகழை தேடிதந்த ’இதயக்கனி’ படப்பாடல்.

சட்டசபையில், ஜெயலலிதாவை கருவாக்கி பாடப்பட்டதால் அதிமுகவினர் மேஜையை தட்டி வழக்கம்போல ரசித்தனர்.

இதுபோல, இன்னொரு நாளும் ஒரு உறுப்பினர் சட்டசபையில் ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க... ‘ என்ற எம்.ஜி.ஆர். நடித்த ’ஒளிவிளக்கு’ படப்பாடலைப் பாடி, ‘ஊதாரிப் பிள்ளைகளை பெக்க மாட்டோம்’ என்ற விவகாரமான வரியையும் விடாமல் வாசித்தார். அது திமுகவினரிடையே ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பிறகு, அமைச்சர் ஜெயகுமார். தலையிட்டு, ஊதாறிப் பிள்ளைகளைத்தானே சொல்கிறார். அதுவும் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்தபோது வெளியான படப்பாடல் தானே என்றார் விவரமாக.

அதன்பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கனிந்ததோடு, தான் ‘ஒளிவிளக்கு’ படத்தை மூன்று முறை செக்கிளில் சென்று அப்போது பார்த்தேன். என எம்.ஜி.ஆர். பற்றி தனக்கு இருந்த கடந்தகால மனநிலையை நினைவுப்படுத்தினார்.

இது ஊடகங்களிலும் வாசகர்களால் ரசிக்கப்பட்டது. ஆனாலும், இதை அங்கு பொறுப்பிலிருப்பவர்கள் கண்டிக்கத் தவறினால், நேரம் விரயமாவதற்கும், தேவையில்லாத சர்ச்சைகள் உருவாவதற்கும் பாடல் காரணமாகிவிடும்.

அவரவர் சூழ்நிலைக்கு ஏற்பவும், இலைமறை காயாக தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தவும் திட்டமிட்டுக்கொண்டு வந்தும் பாடுவார்கள்.

இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க நேரமில்லை என்பவர்கள். பயனில்லாத பிரச்சினைகளை உருவாக்கி மோதிக்கொள்ள வேண்டுமா? என சட்டசபை உறுப்பினர்கள் தான் சிந்திக்க வேண்டும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments