சாவியை தொலைத்த தொழிலாளி: துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய முதலாளி

Report Print Basu in இந்தியா

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வீட்டு சாவியை தொலைத்த தொழிலாளியை, வீட்டின் உரிமையாளர் துண்டு துணடாக வெட்டி கிணற்றில் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிளிமானூரைச் சேர்ந்தவர் எதிராஜ மணிகண்டன், (வயது 65). இவருக்கு இங்கு பண்ணை வீடும், ரப்பர் தோட்டமும் உள்ளது. இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள். இதனால் எதிராஜ மணிகண்டன் திருவனந்தபுரத்திற்கும், கிளிமானூருக்கும் அடிக்கடி சென்று வருவது வழக்கம்.

மணிகண்டன் தோட்டத்தில் வேலை செய்துவந்த கிளிமானூர் பகுதியைச் சேர்ந்த 55 வயதான ரவி கடந்த சில நாட்களுக்கு முன் மாயமாகி உள்ளார்.

இந்நிலையில், மணிகண்டன் ரப்பர் தோட்டத்தின் அருகில் உள்ள கிணற்றில் பிணம் ஒன்று இருப்பதை ஊர் மக்கள் கணடறிந்துள்ளனர். இதுகுறித்து உடனே பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கிணறு மணிகண்டனின் தோட்டத்துக்கு அருகில் இருந்ததால்,பொலிசார் மணிகண்டனை விசாரித்துள்ளனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.

அதில் சந்தேகமடைந்த பொலிசார் அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, மணிகண்டன் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், கொலை செய்யப்பட்டவர் ரவி என்பதையும் தெரிவித்துள்ளார்.

மேலும், பொலிசார் கூறியதாவது, கிளிமானூரில் உள்ள பண்ணை வீட்டிற்கான சாவியை மணிகண்டன், ரவியிடம் கொடுத்து வைத்திருந்துள்ளார்.

2 சாவிகளையும் ரவியிடம் கொடுத்துள்ளார். ரவி அந்த இரண்டு சாவிகளையும் இரண்டு முறை தொலைத்துள்ளார். ரவியிடம் கொடுக்கப்பட்ட சாவி மீண்டும் தொலைந்ததால் ஆத்திரம் அடைந்து மணிகண்டன், ரவியை கீழே தள்ளியுள்ளார்.

அதில் ரவிக்கு தலையில் அடிப்பட்டு இறந்துவிட, அதை மறைக்க மணிகண்டன் ரவியை துண்டு துண்டாக வெட்டி அருகில் உள்ள கிணற்றில் வீசியுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments