பாஜக மூத்த தலைவர் மீது துப்பாக்கி சூடு: நிலைமை கவலைக்கிடம் என தகவல்: உ.பி.யில் பதற்றம்

Report Print Basu in இந்தியா
பாஜக மூத்த தலைவர் மீது துப்பாக்கி சூடு: நிலைமை கவலைக்கிடம் என தகவல்: உ.பி.யில் பதற்றம்

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் நேற்று மாலை பாஜக மூத்த தலைவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை காஜியாபாத்தில் பாஜக மூத்த தலைவர் பிரிஜ்மோகன் டெவாடியா பயணித்து வந்த கார் மீது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் சிக்கி படுகாயமடைந்த பிரிஜ்மோகன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிசார் கூறியதாவது, பிரிஜ்மோகன் கார் மீது சுமார் 100ற்கும் மேற்பட்ட தடவை சுடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தனிநபர் பகை காரணமாக இத்தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பவயிடத்திலிருந்து ஒரு ஏ.கே. 47 மற்றும் இரண்டு பிஸ்டல் மற்றும் ஒரு துப்பாக்கியை கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments