வேலை பார்க்கும் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

Report Print Jubilee Jubilee in இந்தியா

அனைத்து துறை கர்ப்பிணி பெண் ஊழியர்களுக்கும் 6 மாத விடுப்பு வழங்கும் மகப்பேறு மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

அரசு நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதங்களும் தனியார் துறைகளில் பணி புரியும் பெண்களுக்கு 3 மாதங்களும் இதுவரை மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது.

இதனை தற்போது அனைத்து துறை ஊழியர்களுக்கும் 6 மாதம் மகப்பேறு விடுப்பு அளிக்க மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், பச்சிளங்குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் பெண் ஊழியர்களுக்கும் 3 மாதம் விடுப்பு வழங்க இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments