மனிதநேயமற்ற மனிதர்: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவரின் செல்போன் திருட்டு

Report Print Fathima Fathima in இந்தியா

டெல்லியில் வேன் மோதி சாலையில் உயிருக்குத் துடித்துக் கொண்டிருந்த காவலாளியை காப்பாற்றாமல், அவருடைய செல்போனை ஒருவர் எடுத்துச் சென்ற சம்பவம் பெறும்அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்காளத்தை சேர்ந்த மதிபுல் (35) என்பவர், டெல்லியில்உள்ள ஹரிநகர் பகுதியில் நேற்று அதிகாலை நடந்து சென்று கொண்டிருந்த போது, வேன் ஒன்று வேகமாக அவர் மீது மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரை காப்பாற்ற யாரும் முன்வராததால், அவர் பரிதாபமாய் உயிரிழந்து விட்டார். பின்னர் தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

பின்னர் அங்குள்ள சி.சி.டி.வி கமெராவை ஆய்வு செய்த போது, மனிதாபிமானம்இல்லாத ஒருவர், உயிருக்கு துடித்துக் கொண்டிருக்கும் நபரை பற்றி கண்டுகொள்ளாமல் அவரின்செல்போனை திருடி கொண்டு சென்றதை பார்த்து பெறும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

மேலும், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு தப்பிய ஓடிய வாகன ஓட்டுனரைத் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments