ரூ.30 லஞ்சத்தால் பரிதாபமாய் இறந்த குழந்தை

Report Print Fathima Fathima in இந்தியா

உத்திரபிரதேச மாநிலத்தில் ரூ.30 லஞ்சத்தினால் 10 மாத குழந்தை பரிதாபமாய் இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சுமிதா_ஷீவ் என்ற தம்பதியின் குழந்தை கிருஷ்ணா.

பிறந்து 10 மாதமே கிருஷ்ணாவிற்கு திடீரென்று உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் உள்நோயாளி பிரிவில் அனுமதிக்குமாறு கூறியுள்ளார்.

இதனால் குழந்தையின் பெற்றோர் உள்நோயாளி பிரிவுக்கு குழந்தையை கொண்டு சென்றனர். ஆனால் அங்கிருந்த துப்புரவு தொழிலாளி மற்றும் நர்ஸ் ஆகிய இருவரும் குழந்தையை பெட்டில் அனுமதிக்க லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. முக்கியமான ஊசி போடுவதற்கும் மருத்துவ உதவியாளர் ஒருவர் லஞ்சம் கேட்டுள்ளார்.

இந்நிலையில், குழந்தை இறந்து விட்டது. இதனால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க கால தாமதமானதால் குழந்தை இறந்து விட்டது என மருத்துவமனை நிர்வாகத்திடம் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவ கண்கானிப்பாளர் உ.பி.பாண்டே கூறிய போது, அந்த துப்புரவு தொழிலாளியை பணிநீக்கம் செய்ததோடு நர்ஸை வேறு பிரிவுக்கு மாற்றி விட்டோம். மேலும் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments