நாகப்பாம்புடன் செல்ஃபி எடுத்த வாலிபர்: ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்த அரசு

Report Print Peterson Peterson in இந்தியா

குஜராத் மாநிலத்தில் நாகப்பாம்புடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட வாலிபர் ஒருவருக்கு அம்மாநில அரசு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

குஜராத்தில் உள்ள வடோடாரா என்ற நகரில் யாஷிஷ் பரோட் என்ற வாலிபர் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பாட்டில் ஒன்றில் நாகப்பாம்புவை அடைத்து வைத்து அதனுடன் செல்ஃபி எடுத்துள்ளார்.

மேலும், ‘1,000 ரூபாய்க்கு நாகப்பாம்பு விற்பனைக்கு உள்ளது’ என தலைப்பிட்டு பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

சில தினங்களில் இந்த புகைப்படத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமில்லாமல், இப்புகைப்படம் வாட்சப்பிலும் பரவியதை தொடர்ந்து குஜராத் மாநில அரசாங்கத்தில் விலங்குகள் நல அமைப்பின் கவனத்திற்கு சென்றுள்ளது.

புகைப்படம் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக வாலிபரை வரவழைத்து கண்டித்துள்ளனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து வாலிபர் உடனடியாக அப்புகைப்படத்தை பேஸ்புக்கில் இருந்து நீக்கியுள்ளார்.

மேலும், வாலிபரின் குற்றத்திற்காக அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்திய வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி நாகப்பாம்பு பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினம் என்பதால், அதனை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments