சசிகலாவுக்கு கனிமொழி சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா?

Report Print Fathima Fathima in இந்தியா

அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா மீது அடுத்தடுத்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இவரை எம்.பி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என படாதபாடுபடுகின்றனர் அதிமுக-வினர்.

இந்நிலையில் தனக்கு என்ன நேர்ந்தாலும் முதல்வர் ஜெயலலிதா தான் காரணம் என தெரிவித்துள்ளார் சசிகலா புஷ்பா.

இவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பேசியுள்ளார் திமுக எம்.பி கனிமொழி.

நேற்று டெல்லியில் இருவரும் சந்தித்து நீண்ட நேரம் விவாதித்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அப்போது திமுக-வில் இணைவது குறித்து சசிகலா புஷ்பா பேசியதாக தெரிகிறது.

இதற்கு பதிலளித்த கனிமொழி, இப்போதைக்கு அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம், திமுக-வுக்குள் வந்துவிட்டால் கடைசியில் திமுக- அதிமுக இடையே பிரச்னையாக மாற்றிவிடுவார்கள்.

இதனால் மக்கள் மத்தியில் அவப்பெயர் மட்டுமே மிஞ்சும், தொடர்ச்சியாக உங்கள் மீது வழக்கு போடுகிறார்கள், இதிலிருந்தே அவர்களின் பலவீனம் தெரியவில்லையா?

'ஜெயலலிதாதான் போல்டான தலைவர்' என்று மக்கள் நினைக்கிறார்கள். அவரைப் போலவே, 'நீங்களும் துணிச்சல்காரர்' என்று மக்கள் எண்ணுகிறார்கள்.

உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம், தைரியமாக இருங்கள் என ஆறுதல் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments