அரைநிர்வாண கோலத்துடன் காட்டில் தவமிருக்கும் முதியவர்: காரணம் என்ன?

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் சிவனை பார்ப்பதற்காக முதியவர் ஒருவர் கடந்த 10 நாட்களாக சுடுகாட்டில் அரைநிர்வாணமாக தவம் இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறந்தாங்கி சின்ன அண்ணாநகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன்(60), இவர் கடந்த ஆடி அமாவாசை நாள் முதல் தவம் இருந்து வந்துள்ளார்.

இதற்காக அவர் அருகே உள்ள சுடுகாட்டில் 10 அடி ஆழம், 5 அடி நீளம் கொண்டு பள்ளம் தோண்டி அதில் அரைநிர்வாணத்துடன் உள்ளே சென்று தவம் செய்துள்ளார். பள்ளத்தின் மேல் பகுதியில் தென்னை கீற்றினால் மூடியுள்ளார்.

இவ்வாறு ஆடி அமாவசையிலிருந்து தொடர்ந்து 12 நாட்கள் தவம் செய்வதன் மூலம் சிவன் கண்ணுக்கு புலப்படுவார் என்றும் அதையும் மீறி சிவன் புலப்படவில்லை என்றால் 42 நாட்கள் தவம் இருக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் கடந்த 9 தினங்களாக எந்த உணவும் சாப்பிடவில்லை, ஆனால் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலை, மாலை மட்டும் இவருக்கு பயறு வகைகள் கொடுத்து செல்வதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இச்சம்பவத்தை அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து, முதியவர் சம்பந்தமான உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறியுள்ளனர்.

முதியவர் ஒருவர் சுடுகாட்டில் அரைநிர்வாணமாக தவம் இருப்பது, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments