எனக்கு என்ன நேர்ந்தாலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான் பொறுப்பு என்று சசிகலா தெரிவித்திருப்பது அதிமுக பிரமுகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீது பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் நேற்று பாலியல் புகார் தொடர்பாக உயர்நீதிமன்றம் வந்த சசிகலா கூறியதாவது, எங்கள் குடும்பத்தின் மீது கொடுக்கப்பட்டுள்ள இந்த பாலியல் புகார்கள் பொய்யானவை.
இந்த புகார்கள் கொடுக்க சொல்லி அதிமுக-வினர் அந்த பெண்களை மிரட்டியுள்ளனர். என்னை தொடர்ந்து மிரட்டிவருவதாகவும், கொலை கூட செய்து விடுவோம் என்று அச்சுறுத்தல் வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தமிழ் நாட்டில் மக்கள் முதல்வராக பெண்ணை தான் தேர்ந்தேடுத்துள்ளனர். ஆனால் அவர் பெண்களை கஷ்டப்படுத்த வேண்டும் என்பதற்காகவா தேர்ந்தேடுக்கப்பட்டார்.
தனக்கு எது நடந்தாலும் அதற்கு முதல்வர் ஜெயலலிதா தான் காரணமாக இருக்க முடியும். என்னை போல அதிமுக-வில் பலர் குமுறி கொண்டு இருக்கின்றனர்.
என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்க்கும் வல்லமை எனக்கு உண்டு என வெளிப்படையாக கூறியுள்ளார்.