பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் ஊழியருக்கு சம்பளத்துடன் 3 மாதம் விடுமுறை!

Report Print Basu in இந்தியா

பாலியல் தொந்தரவு பற்றி, பொலிசில் புகார் அளித்துள்ள பெண் ஊழியர்களுக்கு, அவரது வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள போது சம்பளத்துடன் கூடிய 3 மாதம் விடுமுறை அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இன்று பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக தொடர்ந்து புகார்கள் வருவதாக குறிப்பிட்டார்.

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டப்பிரிவு 12ன் படி, சம்பந்தப்பட்ட பெண்களுக்கு, அவரது வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள போது மூன்று மாதம் விடுமுறை வழங்கப்படும் என்று கூறினார்.

அதற்கு அந்த பெண் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும், பின்னர் குறிப்பிட்ட நிறுவனத்தாலோ அல்லது குழுவாலோ பரிந்துரை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதுவரை பெண் ஊழியர்கள் அளித்த பாலியல் புகார் குறித்த கேள்விக்கு, அவை குறித்த தகவல்கள் முறைப்படுத்தவில்லை என்று குறிப்பிட்டார்.

தவறான உறவுக்கு அழைத்தல், தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பெண்களுக்கு தொந்தரவு அளிப்பது, ஆபாச படங்களை காட்டுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பணியாற்றும் இடங்களில் பெண்கள் சந்திப்பதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments